மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி! இந்தியாவின் முடிவு பல ஏழை நாடுகளை காப்பாற்றும்! - W.H.O பாராட்டு!
மீண்டும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
By : Thangavelu
மீண்டும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்த நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு நிறுத்தியது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. தடுப்பூசியும் தேவையான அளவிற்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா கூறியிருந்தார். இதனிடையே உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், இந்தியா மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.
பல வல்லரசு நாடுகள் இரண்டுக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு போட்டுள்ளது. அது மட்டுமின்றி பூஸ்டர் தடுப்பூசிகளையும் போட்டு வருகிறது.
ஆனால் ஏழ்மையிலான நாடுகளுக்கு இன்னும் ஒரு டோஸ் கூட போட முடியாத நிலை உள்ளது. ஆனால் இந்தியா தற்போது ஏற்றுமதி செய்ய இருப்பதால் உலகளவில் தடுப்பூசி வழங்கலில் சமநிலையை அடையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar