அரியலூரில் உலகின் பெரிய அடைக்கல அன்னை - பின்னணி என்ன?
உலகிலேயே மிகப் பெரிய அடைக்கல அன்னை சிலை உருவம் தற்பொழுது அரியலூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி உள்ள பகுதியில் தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய அடைக்கல அன்னை சிலை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள சிற்ப கூடத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் சார்பில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த அடைக்கல அன்னை உருவச் சிலை தற்போது 53 அடி உயரத்தில் வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 2011 ஆம் ஆண்டு நிர்வாகிகள் கோரிக்கையின் பேரில் இது தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளில் சிற்பக் கலைஞர்கள் இந்த திருத்தலத்தில் அடைக்கல அன்னையின் சிலைக்காக முத்தமாக முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கும் பணியில் தொடர்ச்சியான வண்ணம் ஈடுபட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சாவூர் சுவாமிமலையில் உள்ள தன்னுடைய சிற்பக் கூடத்தில் சிலைகள் வார்த்தைகளை தயார் செய்து ஏறும் குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலத்திற்கு கொண்டு சென்றனர் இந்த 53 அடி முழு உருவச் சிலையை வடிவமைக்க 10 ஆண்டுகளாக சிற்பி கடும் முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அடைக்கல அன்னை மாதா சிலை குறிப்பாக பித்தளை வெண்கலம் ஐம்பொன் உட்பட உலோகப் பொருட்கள் கலந்த செய்து நிறைவாக தற்போது அடைக்கல அன்னையின் உருவமாக 19 டன் எடையில் 53 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையை நிறுவுவதற்காக அங்குள்ள பூங்காவில் கீழ்த்தளத்தில் இருந்த 18 அடி உயரம் கொண்ட காண்கிரீட் இந்நிலையில் தற்போது சிலை அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக இந்தச் சிலையை வடிவமைக்க ரூ.1 கோடியே 60 லட்சம் செலவு செய்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
Input & Image courtesy:News 18