உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை: நம்முடைய தமிழ்நாட்டில் வர உள்ளதா?
சேலம் மாவட்டத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
By : Bharathi Latha
உலகிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலை என்றால் அது மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடியில் உள்ளது. இதுதான் தற்போது வரை உலகிலேயே மிக உயரமான முருகர் சிலை என்று கூறப்படும். தற்போது தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் கட்டப்பட்ட முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் அமைக்கப் பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு தான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை கொண்ட மாநிலமாக திகழும் உள்ளது.
இந்த நிலையில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை வருகிற 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்று கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முருகன் சிலையை காண்பதற்கான கோயில் திறப்பதற்கு முன்பே கட்டுமான பணிகளை பார்வையிட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகனை தரிசிக்க முத்து மலை முருகன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கோவிலில் முருகனின் ஆறுபடை வீடுகளிலில் இருந்து மண்கள் கொண்டுவரப்பட்டு முருகன் சிலை வடிக்கும் பணியானது தொடங்கப்பட்டது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜப் ஸ்தபதியின் குழுவினர் இதற்கான பணியில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதுகுறித்து கோயிலின் உரிமையாளர் ஸ்ரீதர் கூறுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முருகனுக்காக மிக உயர்ந்த கோவிலை கட்ட வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் விருப்பமாக இருந்தது. அப்போது கட்டத் தொடங்கிய இக்கோவில் தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது. நாங்கள் இந்த கோவிலை கட்ட விரும்பியதை விட முருகன் ஆசைப்பட்டதால் தான் இது சாத்தியமானது என்று கூறினார். இக்கோவிலின் சிறப்பம்சமாக பக்தர்கள் நேரடியாக வேலின் மீது நேரடியாக பால் அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Input & Image courtesy: ABP News