Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடம் - புதிய இந்தியாவின் புதிய வலிமை மற்றும் உறுதிப்பாட்டுக்கான அடையாளம்!

குஜராத்தில் உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அக்கட்டிடம் 67 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது.

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடம் - புதிய இந்தியாவின் புதிய வலிமை மற்றும் உறுதிப்பாட்டுக்கான அடையாளம்!
X

KarthigaBy : Karthiga

  |  18 Dec 2023 5:15 AM GMT

குஜராத் மாநிலம் சூரத் அருகே காஜோத்தி கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு வைர ஆராய்ச்சி மற்றும் வணிக நகரத்துக்கு அப்போதைக்கு முதல் மந்திரி ஆனந்தி பெண் படேல் அடிக்கல் நாட்டினார். அந்த நகரத்துக்குள் சூரத் வைரச்சந்தை கட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகமாக வைரசந்தை கட்டிடம் அமைந்துள்ளது. 33.54 ஏக்கர் பரப்பளவு மனையில் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட சதுர அடி பரப்பளவு உடன் இந்த பிரம்மாண்ட கட்டிடம் அமைந்துள்ளது. அதில் சுமார் 4,500 வைர வியாபார அலுவலகங்கள் அமைந்துள்ளன. வைர வியாபாரிகளுக்கு ஏலத்தின் மூலம் அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டன.


மும்பையில் வியாபாரம் செய்து வந்தவர்களும் தங்கள் வர்த்தகத்தை இந்த கட்டிடத்திற்கு மாற்றி விட்டனர். இது 15 மாடிகள் கொண்ட ஒன்பது கட்டிடங்களுடன் உள்ளது. அலுவலகங்கள் 300 சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுர அடி வரை சிறியதும் பெரியதுமாக அமைந்துள்ளன. சில்லரை நகை விற்பனை நிலையங்களும், சுங்கத்துறை ஒப்புதல் அலுவலகங்களும் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமான சூரத் வைரசந்தை கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-


சூரத் நகரின் பிரம்மாண்டத்துக்கு மேலும் ஒரு வைரம் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வைரம் சிறியதல்ல உலகிலேயே சிறப்பானது. உலகின் மிகப்பெரிய கட்டிடங்கள் கூட இந்த வைரத்தின் பளபளப்புக்கு முன்பு மங்கிவிடும். உலகில் யார் இந்த வைரச் சந்தையை பற்றி பேசினாலும் சூரத் இந்தியா ஆகிய வார்த்தைகளை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


இந்தியர்களின் வடிவமைப்பு திறனை இச்சந்தை காட்டுகிறது. புதிய இந்தியாவின் புதிய வலிமை மற்றும் உறுதிப்பாட்டுக்கான அடையாளமாக இக்கட்டிடம் அமைந்துள்ளது சூரத் வைரத் தொழில் ஏற்கனவே 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது இந்த சந்தை திறப்பால் மேலும் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News