பூம்புகார் அருகே வானகிரி ரேணுகாதேவி கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
பூம்புகார் அருகே வானகிரி ரேணுகாதேவி கோவிலில் துர்காஸ்டாலின் வழிபாடு செய்தார்.
By : Karthiga
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மீனவ கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் மற்றும் திரளான பெண்கள் பூர்ணகும்ப மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றினார். இதனை அடுத்து விநாயகர், சுப்பிரமணியர், ஐயப்பன், காளியம்மன் மற்றும் ரேணுகாதேவி எல்லையம்மன் ஆகிய சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனை அடுத்து ராணுவ துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவர் வீரவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவரிடம் கிராமப் பிரமுகர்கள் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய மனுக்கள் அளித்தனர். அவருடன் நிவேதா முருகன் எம்.எல்.ஏ , தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல் ஜோதி தேவேந்திரன், தி.மு.க தலைமை குழு செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் , ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.