Kathir News
Begin typing your search above and press return to search.

திருமலையில் பவித்ரோற்சவம் பார்க்க விருப்பமா? இதோ டிக்கெட் முன்பதிவு பற்றிய அறிவிப்பு

வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆன்லைனில் முன்பதிவு செய்யலாமென திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலையில் பவித்ரோற்சவம் பார்க்க விருப்பமா? இதோ டிக்கெட் முன்பதிவு பற்றிய அறிவிப்பு
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 July 2022 12:09 PM GMT

வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆன்லைனில் முன்பதிவு செய்யலாமென திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் 8'ஆம் தேதியிலிருந்து 10'தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. அதில் பங்கேற்ற தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி காலை 10 மணி அளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது.

மொத்தம் 600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன, பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்த குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து பவித்ரோற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.

மேலும் பவித்ரோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்கள் பாரம்பரிய உடையில் காலை 7 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு வரவேண்டும்.

தரிசன டோக்கன்களுடன் ஏதேனும் அசல் புகைப்பட அடையாள அட்டை கொண்டு வந்து தேவஸ்தான அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும், மேலும் விவரங்களுக்கு திருமலா-திருப்பதி இணையதளத்தில் www.tirumala.org அல்லது www.tirupatibalaji.ap.gov.in இல் பார்க்கலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News