Kathir News
Begin typing your search above and press return to search.

காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி - பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சட்டசபையில் நேற்று நடைபெற்ற மாநில கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி - பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

KarthigaBy : Karthiga

  |  22 April 2023 2:16 AM GMT

காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதால் யோகா பயிற்சி அளிக்க வேண்டும் காவலர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஆய்வாளர்களாக உள்ள 239 பேருக்கு நீண்ட நாட்களாக டி.எஸ்.பி.யாக பதிவு உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகள் செய்வது தெரியாமல் எப்படியாவது குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று செயல்படுவதால் தான் பல் பிடுங்கும் சம்பவங்கள் நடந்துள்ளது. அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது . ஆனால் கடையிலிருந்து வெளியில் வந்தவுடன் போலீசார் ஊத சொல்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை .அதை ஒழுங்குபடுத்த வேண்டும். நிதி நிறுவனங்கள் நடத்த லைசன்ஸ் கொடுக்கும்போது எவ்வளவு வட்டி என்று கண்டறிந்த முறைகேடுகளை தடுக்க வேண்டும். திருவிழாக்களில் நாட்டுப்புற கலைஞர்கள் இரவு 9 மணிக்கு மேலும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும். பெண் காவலர்களை இரவு ரோந்து பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் .இவ்வாறு அவர் பேசினார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News