Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய இளைஞர்களின் திறமைகளை பார்த்து வியக்கும் உலக நாடுகள்... எப்படி தெரியுமா?

இமாச்சாலப் பிரதேசப் பல்கலைக் கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.

இந்திய இளைஞர்களின் திறமைகளை பார்த்து வியக்கும் உலக நாடுகள்... எப்படி தெரியுமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 April 2023 2:09 AM GMT

சிம்லாவில் உள்ள இமாச்சாலப் பிரதேசப் பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், கடந்த 1970-ம் ஆண்டு முதல் உயர் கல்வித்துறைக்கு இமாச்சலப்பிரதேசப் பல்கலைக்கழகம் மிக முக்கியப்பங்கு வகித்து வருவதாகக் கூறினார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் கலை, மருத்துவம், நீதி, விளையாட்டு, சமூக சேவை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது தலைசிறந்த பங்களிப்பை அளித்து வருவதை நினைவு கூர்ந்தார்.


இமாச்சலப் பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை, உலக நாடுகளின் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருவதுடன், இந்தப் பகுதி பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தொன்மை வாய்ந்த புகலிடமாகத் திகழ்வதையும் குறிப்பிட்டார். இருப்பினும், பருவநிலை மாறுபாடு, இந்த மாநிலத்தின் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், இந்தத் தொன்மை வாய்ந்த இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதற்கும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதே தற்போதையத் தேவை என்று குறிப்பிட்டார்.


அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், சீர்திருத்தத்திற்கான உத்வேகம் ஆகியவற்றை உருவாக்குவதே ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும் என்றார். இந்திய இளைஞர்கள் உலகளவில் தங்களது திறமைகளை நிரூபித்து சாதித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெரும்பாலானவர்கள் ஸ்டார்ட் –அப் நிறுவனங்களை உருவாக்கியிருப்பதே இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றும் கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News