யப்பா...! நாட்டின் பாரம்பரியத்தை அப்படியே செதுக்கி வைத்திருக்கும் புதிய நாடாளுமன்றம் - என்ன இருக்கு தெரியுமா?
நாட்டின் பாரம்பரியத்தை அப்படியே செதுக்கி வைத்திருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அழகும் வசதிகளும்
By : Mohan Raj
தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது. தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டடம் 1927ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் தற்போதைய காலத்துக்கு ஏற்ப போதுமான வசதிகள் இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்த அரசு, அதற்கான பணிகளை 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தொடங்கியது.
தற்போது கட்டி முடிக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் பணி டாடா ப்ராஜக்ட்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்!
இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை பறைசாற்றும் அரசர் கால ஓவியங்கள் மற்றும் அரசர் கால சிலைகள் ஆகியவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் காணக் கிடைக்காத பல அரிய நிகழ்வுகளையும் சிலைகளாக வடித்துள்ளனர் . இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.