"கேரளா தான் முஸ்லிம்கள் வசிக்க சிறந்த மாநிலம்" "உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிப்பது இந்தியாவில் தான்" - ஜாகிர் நாயக்கின் லேட்டஸ்ட் வீடியோ.!
"கேரளா தான் முஸ்லிம்கள் வசிக்க சிறந்த மாநிலம்" "உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிப்பது இந்தியாவில் தான்" - ஜாகிர் நாயக்கின் லேட்டஸ்ட் வீடியோ.!

By : Kathir Webdesk
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுவரும் பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் 200 மில்லியன் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்றும் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு தவறான குறைவான எண்ணிக்கையை காட்டுகிறது என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களை கணக்கில் சேர்க்கவில்லை என்பதால் முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் என்று கூறியிருந்தார்.
தற்போது புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் முஸ்லிம்கள் தமக்கென்று ஒரு கட்சி தொடங்க வேண்டுமென்றும் தங்களது மத சடங்குகளை பின்பற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாவிட்டால் மதச்சார்பற்ற அல்லது முஸ்லிம்கள் நிறைந்த கேரளா போன்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து விடவேண்டும் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
"இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவலின்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாம் 14.2% என்ற எண்ணிக்கையில் இருந்தோம் ஆனால் சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் 200 மில்லியனுக்கும் மேல் முஸ்லிம்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இது அசாம் மற்றும் இன்னும் சில மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களை தவிர்த்து கூறப்படும் எண்ணிக்கை" என்று கூறியுள்ள ஜாகிர் நாயக், "என்னை பொருத்தவரை இந்தியாவில் 250 முதல் 100 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இந்திய அரசு உண்மையான எண்ணிக்கையை வெளியிட விடாமல் தடுக்கிறது. அதிகாரப்பூர்வமாக இந்தோனேஷியா உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களை கொண்ட நாடு என்று கூறப்படுகிறது. ஆனால் என்னை பொருத்தவரை முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் உலகத்தில் முதலிடம் வகிப்பது எனது அன்புக்குரிய இந்திய நாடு தான்" என்று பேசியுள்ளார்.
'பாசிச பா.ஜ.க அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்கு தீர்வு என்ன' என்று என்ற கேள்விக்கு அரசியல்ரீதியாக ஒரு கட்சி தான் இருக்க வேண்டும் என்றும் எனினும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு அரசியல் கட்சியை தொடங்க வேண்டும் என்றும் பிரிவு பேதமின்றி அனைத்து முஸ்லிம்களும் இந்த கட்சியில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தலித்துகள் இந்துக்கள் இல்லை என்றும் இந்துக்களை எதிர்க்க தலித்துகளையும் முஸ்லிம்கள் தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இருவரும் இணைந்தால் இந்திய மக்கள் தொகையில் 40%க்கும் மேல், கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் இருப்பார்கள் என்பதால் பிற சிறுபான்மையினரையும் சேர்த்துக்கொண்டால் இந்துக்கள் 60 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாவிட்டால் தாங்கள் வசிக்கும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கும், மாநிலத்திலிருந்து மதச்சார்பற்ற முஸ்லிம்கள் அதிகமுள்ள மாநிலங்களுக்கும், அல்லது ஊரிலிருந்து மத நம்பிக்கைகளை பின்பற்ற வசதியான சூழல் நிலவும் வேறு ஊருக்கும் புலம்பெயர்ந்து சென்று விடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு சிறந்த உதாரணமாக கேரள மாநிலத்தை குறிப்பிட்ட ஜாகிர் நாயக் அங்குதான் மதவாதம் இல்லை என்றும் அங்கிருக்கும் மக்கள் தொகை நிலவரம் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றும் கூறி விளக்கம் அளித்துள்ளார். பா.ஜ.க அரசுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை என்பதால் முஸ்லிம்கள் புலம்பெயர கேரளா தான் சிறந்த மாநிலம் என்று குறிப்பிட்ட ஜாகிர் நாயக் மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களையும் முஸ்லிம்களுக்கு சாதகமான சூழல் நிலவும் இடங்களாக குறிப்பிடுகிறார்.
