ஓமன் நகரில் வசிக்கும் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி!
By : Bharathi Latha
ரமலான் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களில் உள்ளன. இந்த நோய் தொற்றுக்கு மத்தியிலும் தங்களுடைய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முழுவதும் வழங்கப்படும் இலவச பொருட்களை தவறாமல் இந்த வருடமும் எமிரேட்ஸ் சேர்ந்த ஸ்டீவ்டோரிங் என்ற நிறுவனம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கிவருகிறது. ராசல் கைமா நகரில் இருந்து ஓமன் நாட்டின் முசந்தம் பகுதிக்கு செல்லும் வழியில் எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங் என்ற நிறுவனத்தின் தொழிலாளர் முகாம் இருந்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது பழக்கம். இந்த ஆண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தினமும் பிரியாணி, ஜூஸ், தண்ணீர், பேரீச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தாலும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது.
சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகவே இங்கு இலவச பொருட்களை அனைவருமே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்த பணிகளை நலத்துறை அலுவலர் அஹமது சுலைமான் தலைமையிலான குழுவினர் மேற்பார்வை செய்து வருகின்றனர். மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் தான் கடவுள் நம்மை மென்மேலும் பாதுகாப்பார் என்ற கொள்கையை பின்பற்றி இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இதை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.