ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரவு சிறப்பு விற்பனை கண்காட்சி.!
By : Bharathi Latha
ஷார்ஜாவில் வசிக்கும் இந்திய மக்களுக்கு குறிப்பாக ரமலான் பண்டிகையை கொண்டாட இருக்கும் முஸ்லிம்களுக்காக மிகச்சிறப்பான இரவு சிறப்பு விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது.
எக்ஸ்போ சென்டரில் ரமலான் இரவு சிறப்பு விற்பனைக் கண்காட்சி கடந்த மாதம் தொடங்கியது. இந்த ஷார்ஜா சேம்பர் ஆப் காமர்சின் தலைவர் அப்துல்லா சுல்தான் அல் ஒவைஸ் தொடங்கி வைத்தார். இதில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடைகளை அமைத்துள்ளன. தினமும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். அடுத்த மாதம் மே 8 ஆம் தேதி இது நடைபெறும்.
இந்த விற்பனை கண்காட்சி முடிவதற்கு இன்னும் ஒரு நாட்களை மீதமுள்ள நிலையில் அனைவரும் வருகை தந்து இவற்றை சிறப்பிக்க வேண்டுமென்று இதன் தலைவர் கேட்டுக்கொண்டார். எனவே ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்து மக்களும் மற்றும் அனைத்து தரப்பினர்களும் தங்களுடைய வீடுகளுக்கு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் இங்கு வந்து சிறப்பு தள்ளுபடியில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இரவு சிறப்பு விற்பனை கண்காட்சியில் முக்கிய அம்சம் என்னவென்றால், இங்கு இரவு நேரத்தில் விற்பனை நடைபெறுவதும் காரணமாக வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் தங்களுடைய நேரத்தை இரவு நேரத்தில் பொருட்களை வாங்கி செல்லலாம்.
மேலும் அதிகமான இந்தியர்கள் வேலைக்கு செல்பவர்களாக உள்ள நிலையில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு சிறப்பு விற்பனை கண்காட்சி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இவற்றைப் பயன்படுத்திக் கொண்டோம் ரமலானை நல்ல முறையில் கொண்டாட இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று இதனை ஏற்பாடு செய்தால் குழுவின் சார்பாக தலைவர் அப்துல்லா சுல்தான் கேட்டுக்கொண்டார்.