சர்வதேச தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்ட அகவல் மின்னிதழ் வெளியீட்டு விழா!
By : Bharathi Latha
சென் அகாடமி பயிற்சி வளாகம் மே மாதத்திலிருந்து 'அகவல்' என்கின்ற வளர் தமிழ் மாத பன்னாட்டு இணையதளம் வழியான இதழ் ஒன்றைத் தொடங்கி உள்ளது. மேலும், முதன் முதலில் தமிழ்நாட்டில் வெளிவரும் காணொளிக்காட்சி மின்னிதழாகவும் இது வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அகவல் மின்னிதழ் முழுக்க முழுக்க தமிழர்களின் மையப்படுத்திய ஒரு மின்னிதழ் ஆகும். இதில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் நாட்டில் என்ன நிலவரம் என்பதை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று இதன் செயலாளர் குறிப்பிட்டார்.
அகவல் மின்னிதழ் வெளியிட்டு விழாவின் ஆரம்பமாக தமிழரின் பாரம்பரியக் கலைகள் நடைபெற்றன. செல்வி ரூபாவதி என்ற கலைக்குழுவினர் தமிழரின் பாரம்பரியமிக்க கலைகளுடன் இந்த நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருமதி பூங்கொடி துரைசாமி கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து, கவிதாயினி கலாவிசு, இயக்குனர் மற்றும் ஜவஹர் கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார். தேனமுதுத் தமிழ் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர் முனைவர் லதா சந்துரு அகவல் மின்னிதழை வெளியிட புதுவை எழுத்தாளர், சாகித்ய அகாதமி விருதாளர் கவிஞர் மனுஷி கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் 'அகவல்' இதழ் தகவல்கள் மிகவும் அருமையாகவும், புதுமையாகவும் சிந்திக்க வைக்கவும் தமிழராக இருப்பதற்குப் பெருமைப்பட வைப்பதாகவும் திகழ்கிறது என்று கூறினார்.