குவைத் விமான நிறுவன தலைவருடன் சந்திப்பு நடத்திய இந்திய தூதர்.!
By : Bharathi Latha
இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் முகத்தை அனைவராலும் பார்க்க முடிகிறது. குறிப்பாக, இந்தியாவில் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையும் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தட்டுப்பாடு என்ற நிலைக்குச் செல்ல பட்டது. ஆகவே நட்பு நாடுகள் பலவும் இந்தியாவிற்கு பல்வேறு நட்புகளை வெளிப்படுத்தும் விதமாக மருத்துவ பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பல நிறுவனங்களும் மற்றும் சமூகத்தில் மனித நிலையில் உள்ள பல நல்ல உள்ளங்களின் காரணமாக பண உதவியும் செய்துள்ளார்கள். வெளிநாடுகள் பலவும் குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, குவைத் போன்ற நாடுகளும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்தது. மேலும் மருந்துப் பொருட்களை எடுத்து வருவதற்காக அந்தந்த நாட்டு விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. அந்த வகையில் குவைத் நாட்டின் விமான நிறுவனத்தின் தலைவர் அலி M. அல்டுகானுடன் இந்திய தூதர் C.P. ஜார்ஜ் இதுகுறித்து சந்தித்து பேசினார்.
அப்போது இரு தரப்பு உறவு, விமான போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பு, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. இந்த சந்திப்பின் போது இந்திய தூதர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். இரு தரப்பையும் சேர்ந்த அதிகாரிகள் அப்போது பங்கேற்றனர். அவர்கள் இங்கு நோய்த்தொற்றை எவ்வாறு சிறந்த முறையில் கையாளுவது குறித்து விவாதித்தனர். மேலும் அந்தந்த நாடுகளிலும் தங்களுடைய வளமான கருத்துக்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.