கொரோனாவை வெற்றி கொள்ள தமிழகத்திற்கு உதவிய மலேசியத் தமிழர்கள்!
By : Bharathi Latha
தற்பொழுது தமிழகத்தில் மிக மோசமான நிலையில் பரவி வரும் தொற்றுகளைத் தொடர்ந்து, மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி என இருமுனைகளில் தமிழ்நாடு அரசாங்கம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகிறது. இந்த இக்கட்டான நெருக்கடியைச் சமாளிக்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டுமென கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி பலர் முன்வந்து நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள்.
வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்களிம், மலேசியத் தமிழர்கள் சார்பிலும் ஒரு கணிசமான தொகை தமிழ் நாடு அரசின் முதலமைச்சர் நிவாணநிதிக்கு வழங்கப்படும் என தலைவர் S. விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் M. சரவணனும் கூட்டாக சேர்ந்து அறிவித்திருக்கின்றனர். நமது தமிழ் உறவுகள், பல்வேறு நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் மலேசியத் தமிழர்கள் மனிதாபிமான அடிப்படையில் நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டியதும் நமது கடமை என்றும் தலைவர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே வேளையில் மலேசியத் தமிழர்களின் கூட்டு முயற்சியாக இந்த மக்கள்நல உதவித் திட்டம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்பட விரும்புகிறோம் எனக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் தொடர்பில் தமிழ் நாடு COVID-19 நிவாரணங்களுக்காக நிதி உதவி அளிக்க விரும்பும் தனி நபர்களும், அமைப்புகளும் உதவி செய்யுமாறு அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டனர்.