ஒரு வருடத்திற்கு பிறகு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது: சவுதி அரசு!
By : Bharathi Latha
இந்தப் பெரும் தொற்றை கருத்தில் கொண்டு பல்வேறு உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை காக்கும் விதமாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்கு வருகை புரிவதை தடுக்க தடைவிதித்து இருந்தன. குறிப்பாக இந்தியர்கள் வருகைக்கும் சவுதி அரசு தடை விதித்திருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணங்களுக்கான தடையை சவூதி அரேபியா தளர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி போடப்பட்ட சவூதி மக்கள், ஒரு வருடத்திற்கும் பிறகு இன்று முதல் முறையாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த 14 மாதங்களாக, 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டிற்குள் சர்வதேச பயணம் வைரஸ் தொற்றினால் தடைபடுகிறது என்ற கவலையால் சவூதி குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, மார்ச் 2020 முதல் நடைமுறையில் உள்ளது. இது வெளிநாட்டில் படிக்கும் சவூதி மாணவர்களையும் மற்றவர்களையும் கடந்த வருடத்தில் இருந்து பாதித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய மாதங்களில், சவூதி அரேபியா 11.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது.
எனவே தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு செல்வதை அனுமதிக்கவும், மட்டும் வேறு நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வருகை தருவதற்கு சவுதி அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. சவூதி பயணிகள் தங்களது சுகாதார நிலைகளை விமான நிலைய அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் சுகாதார பயன்பாடான தவக்கல்னா மூலம் காட்ட வேண்டும். வெளிநாட்டிலிருந்து திரும்பும் பயணிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் வைரஸுக்கு சோதிக்கப்படுவார்கள். தொற்றுநோய்களின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகவும் கடுமையான சில நடவடிக்கைகளை விதித்தது சவுதி அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.