சமூக நல்லிணக்கம் குறித்து நடைபெற்ற சிறப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்!
By : Bharathi Latha
துபாய் உள்ளிட்ட பல உலக நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்ற பன்னாட்டு கருத்தரங்கம். கல்லிடைக் குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் தி சென் அகாடமி ஆளுமைசார் பயிற்சி பயிலகம், புதுச்சேரி ஆகியவை இணைந்து ஈகைப் பெருநாள் சிறப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில், சமூக நல்லிணக்கம் குறித்து சிறப்பு கருத்தாளர்களின் கருத்துகள் பகிரப்பட்டன. துபாயிலிருந்து திண்டுக்கல் ஜமால் மைதீன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரான முனைவர் முகமது முகைதீன் அவர்கள் துபாயிலிருந்து வரவேற்புரை கூறினார். ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான முதுவை ஹிதாயத் துபாயிலிருந்தும் வாழ்த்துரைத்தனர். பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் சிறப்புக் கருத்தாளர்களாக சிங்கப்பூரிலிருந்து புதிய நிலா மு. ஜஹாங்கீர், கனடா சிறப்பு கருத்தாளர்களாக கலந்து கொண்டனர்.
முனைவர். சிவசக்தி இராஜம்மாள், முனைவர் கா.செய்யது அகமது கபீர் மற்றும் பெண் விடுதலை கட்சி நிறுவனர் சமூக ஆசிரியர் சபரிமாலா ஆகியோர் சிறப்பாக பங்கேற்று சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை வழங்கினர். ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாட்டிலிருந்தும் பார்வையாளர்கள் கலந்து கொண்டு மிகச்சிறந்த முறையில், பின்னூட்டக் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இவ்வாறாக, சிறப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம் முனைவர் முகைதீன் அவர்களது ஆக்கத்திலும், ஒருங்கிணைப்பிலும் சிறப்பாக நடந்து முடிந்தது.