வெளிநாட்டு வாழ் தமிழர்களுடன் தமிழக அரசு இணையவழி கலந்துரையாடல்!
By : Bharathi Latha
தமிழ்நாட்டிற்கான தற்பொழுது பதவியேற்றுள்ள தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான், முதன்முறையாக பங்கேற்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுடனான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியினை சவுதி அரேபியாவின் ஜெத்தா தமிழ்ச்சங்கம் சார்பில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஜூம் செயலி வாயிலாக நடத்தியது. இந்த கலந்துரையாடலை ஜெத்தா தமிழ் சங்க உறுப்பினர்கள் சிராஜ் மற்றும் ஜெரால்டு ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பொறியாளர் காஜா மைதீன் அவர்கள், செஞ்சி K.S.மஸ்தான் அமைச்சரை அறிமுகம் செய்து வைத்து, சிறப்புறையாற்ற அழைத்தார். நிகழ்வில் சவுதிஅரேபியா வளைகுடாநாடுகள் மட்டுமன்றி பல்வேறு வெளி நாடுகளில் வாழும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொன்டு அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளையும், மற்றும் தங்களுக்குத் தேவையான வேண்டு கோள்களையும் முன் வைத்தனர். விழாவில் உரையாற்றிய அமைச்சர், வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழக அரசு என்றும் பாடுபடும் என்று அவர் கூறினார்.
அனைவரின் கோரிக்கைகளையும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொனடு சென்று உரிய பரிசீலனைக்கு பின்பு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் மல்லப்பன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஜெத்தா தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் செய்து இருந்தனர். அமைச்சருக்கு வெளிநாடுவாழ் தமிழர்களின் கோரிக்கைகளை ஓர் விண்ணப்பமனுவாக ஜெத்தா தமிழ் சங்கம் சார்பில் அனுப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டது.