துபாய் சமூக ஆர்வலர்கள் சார்பில் நடத்திய கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம்!
By : Bharathi Latha
தற்பொழுது தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசின் சார்பாக எடுக்கப்பட்ட வருகிறது. மத்திய அரசும் இதற்கு முழு ஒத்துழைப்புடன் செயல்படுகின்றது.
அதன் அடிப்படையில், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சேரை இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், "கொரோனாவை வெல்வோம்: மனித உயிர் காப்போம்" என்ற தலைப்பில் இணைய வழியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
முனைவர் எஸ்.பண்டாரசிவன் அவர்கள் இந்நிகழ்ச்சியை வரவேற்றார். பின்னர், தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரும், துபாய் சமூக ஆர்வலருமான முனைவர் முகமது முகைதீன் தொடக்க உரை ஆற்றினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் நாக சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் சிவசக்தி ராஜம்மாள் துவக்கவுரை ஆற்றினார்.
துபாய் மருத்துவர் கதீஜா மஹ்மூத் சிறப்புரை வழங்கினார். புதுச்சேரி முனைவர் கவிதா செந்தில், பிரான்ஸ் பாவலர் பத்ரிசியா பாப்பு, கர்நாடகா கவிஞர் தேன்மொழி, அபுதாபி கவிஞர் கீதாஸ்ரீராம் ஆகியோர் கருத்துரையாளர்களாக கலந்து கொண்டனர். இணையத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த சிறப்பு பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வுக்காக உரையாற்றிய அனைவருக்கும் இந்த சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய அனுபவங்களையும் மற்றும் தாங்கள் கடந்து வந்த பாதைகளையும் நேர்மறை முறையில் எப்படி கொரோனாவை கடந்து செல்வது? என்பது குறித்த பல்வேறு விதமாக விவாதிக்கப்பட்டது.