கொரோனா நோயாளிகளுக்கு கைகொடுக்கும் நியூஜெர்சி அஞ்சப்பர் உணவகம்!
By : Bharathi Latha
பல்வேறு பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியாவை சேர்ந்த உணவகங்களில் மற்றும் பல்வேறு இந்திய சமுதாய மக்களும் இந்தியாவிற்கு தற்போது உதவி செய்ய முன்வந்துள்ளனர். குறிப்பாக அவர்கள் வேறு வெளிநாடுகளில் இருந்தாலும் தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களில் தற்போது அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் செயல்பட்டு வரும் அஞ்சப்பர் உணவகம், காரைக்குடி பகுதிக்கு உதவ முன் வந்துள்ளது. வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி அவர்களது உணவகத்தில் விற்பனையில் 70 சதவீதத்தை காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கோவிட் நோயாளிகளுக்கு உதவ முன்வந்துள்ளது.
இதன் மூலம் அந்த நாளில் விற்பனை இவ்வளவு நடக்கிறதோ, அதில் 70 சதவீதத்தை மொத்தமாக நோயாளிகளுக்கு உதவுவதற்காக கொடுக்க உள்ளனர். மேலும் காரைக்குடி பகுதிகளில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு பிரிவுக்கு 30 ஆயிரம் டாலர் மதிப்பில் உதவ முன்வந்துள்ளது. எனவே இந்த நிகழ்ச்சி மூலம் பல்வேறு மக்கள் உதவி பெற உள்ளனர் என்பதற்காக அங்குள்ள தமிழர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
எனவே, வாடிக்ககையாளர்களுக்கு விருப்பமான அஞ்சப்பர் உணவை வாங்கி சிவகங்கை மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு நியூஜெர்சியில் இயங்கும் அஞ்சப்பர் உணவக உரிமையாளர் கண்ணன் ஆறுமுகம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த திட்டம் சோலார் கிராம பவுன்டேஷன் வெளிநாடுவாழ் இந்திய நண்பர்கள் மற்றும் சந்தோஷ் நல அறகட்டளை ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.