சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய கதைக்களம்!
By : Bharathi Latha
சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் சார்பாக மாதாந்திர கதைக்களம் என்ற நிகழ்வு ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதமும் கதைக்களம் மிகவும் அருமையாக நடைபெற்றது. இந்த கதைக்களம் என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் கதை ஆர்வமுள்ள படைப்பாளிகளிடமிருந்து கதைகள் வரவேற்கப்படுகின்றன. அவற்றில் சிறந்த கதைகளை நடுவர்கள் தேர்ந்தெடுத்து அவற்றிற்கான பரிசுகளையும் வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி மாதந்தோறும் இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இளம் கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பாக, தமிழில் கதை எழுதத் தெரிந்தவர்கள் ஊக்குவிப்பதே முக்கிய நோக்கமாகும். இந்த மாதமும் கதைக்களத்தில், இணையம் வழி இணைந்தவர்களையும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக கதைக்களத்தை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் ஒருங்கிணைப்பாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் வரவேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்த மாதக் கதைக்களத்திற்கு வந்திருந்த படைப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்றஒரு படைப்பை பங்கேற்பாளர்கள் வாசித்தனர்.
கதைக்களத்திற்கு வந்திருந்த பொதுப்பிரிவு கதைகள் பற்றிய ஆக்கபூர்வமான, சுவையான கருத்துகளை எழுத்தாளர்கள் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் எழுத்தாளர் சந்திப்பு நடைபெறும். ஓர் உள்ளூர் எழுத்தாளர் கலந்துகொண்டு அவருடைய எழுத்துப் பயணத்தைப் பற்றி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வார். தொடர்ந்து, அவருடன் கதைக்களப் பங்கேற்பாளர்கள் அவருடைய படைப்புகள் குறித்து கலந்துரையாடலாம். தற்பொழுது இதில் புதிதாக சிறுகதைப்போட்டியில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கும் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். அவர்களுக்குப் பிடித்த சிறுகதைகளை அறிமுகம் செய்து பார்ப்பதன் மூலம் அவர்கள் போட்டியில் பங்கேற்க முடியும் என்பதையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.