Kathir News
Begin typing your search above and press return to search.

அபுதாபியில் உள்ள தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்.!

அபுதாபியில் உள்ள தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Jun 2021 6:16 PM IST

இந்தியாவில் இருந்த வேலை காரணமாக வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அத்தகைய நபர்களில் பெரும்பாலானோர் அபுதாபியில் தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் அவர்களுடைய குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சில தன்னார்வ நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் 'Privilege Fast Service card' முதல் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு வழங்கப்பட்டது.


தற்போது உலகளாவிய அளவில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் வேலைக்கு வரும்படி நிறுவனம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவரும் வெளியில் சென்று வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இலவசமாக மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


அதன் தொடக்க விழா நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம், ஜுன் 6 தேதி காலை 9 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH மருத்துவமனை கட்டிடத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் மற்றும் அய்மான் பைத்துமால் தலைவர் அதிரை ஹமீது ஹாஜியார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News