Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை : நோய் தொற்றின் சமயத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் ரோட்டரி கழகம்.!

இலங்கை : நோய் தொற்றின் சமயத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் ரோட்டரி கழகம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Jun 2021 6:22 PM IST

இலங்கையில் அமைந்துள்ள திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் உள்ளது மான்கள் சரணாலயம். இங்கு வாழும் மான்கள் தற்போது உணவு காரணமாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருவதாக செய்திகள் வலைத்தளங்களில் பரவின. தற்போது உள்ள தொற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த மாதிரி இந்த சரணாலயத்திற்கு மக்கள் நடமாட்டத்திற்கு வழியில்லை இதன் காரணமாக இந்த விலங்குகளுக்கு உணவு அளிக்க ஆட்கள் இல்லாத காரணத்தினால் அவை உணவின்றி தவித்தன. இந்த நோய் தொற்று மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளின் வாழ்க்கை சூழ்நிலைகளையும் மிகவும் மாற்றி அமைத்துள்ளது என்று சொல்லலாம்.


சில வருடங்களாக இந்த சரணாலயத்தில் உள்ள மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு அளிக்கப் பட்டு வந்தது. இங்கு ஏற்பட்டுள்ள பயணத் தடையின் காரணமாக உணவு அளிக்க முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டது. இதனால் மான்கள் உணவின்றி தவிர்த்தது இதன்காரணமாக இந்த கழகம் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று உணவு அளிக்கும் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது.


ரோட்டரி கழகத்தின் சார்பில் மருது அவர்கள் செயல்பாட்டை நடைமுறை படுத்தி வருகிறார். திருகோணமலையில் வாழும் மற்றும் இங்கு வரும் மக்கள், தங்களால் முடிந்தளவு மான்கள் சரணாலயத்துக்கு நேரில் சென்று உணவு அளித்து வருகிறார்கள். எனவே இத்தகைய உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை அவற்றை பாதுகாப்பது நமது கடமை என்பதை கழகத்தின் தலைவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News