பஹ்ரைனில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்திய மாம்பழம் திருவிழா.!
By : Bharathi Latha
இந்தியாவில் மாம்பழம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. காய்கறி மார்க்கெட்டில் அதிகமாக விற்பனை ஆகக்கூடிய ஒரு பழமாக இருந்து வருகிறது. இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் ஏற்றுமதி ஆகிறது. மேலும் அனைத்து நாட்டு மக்களினால் விரும்பி வாங்கக்கூடிய வகையில் இதன் விலையும் அமைந்துள்ளது.
அந்த வகையில் தற்பொழுது பஹ்ரைனில் இந்திய மாம்பழ திருவிழா கொண்டாடப்பட்டது. இந்திய மாம்பழங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலும் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. பஹ்ரைன் நாட்டில் வசித்து வரும் பல்வேறு நாட்டு மக்களிடையே இந்திய மாம்பழங்கள் குறித்து அறிமுகம் செய்யும் வகையில் இந்த மாம்பழ திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பக்ரைனில் அதிகமாக இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் அவர்களின் மூலமாக அங்குள்ள நாட்டு மக்களுக்கு இந்திய மாம்பழங்களின் அறிமுக விழாவாக இது அமைந்திருக்கிறது. இந்த திருவிழா அல் ஜசிரா சூப்பர் மார்க்கெட்டில் தொடங்கியது. இதனை இந்திய தூதரக அதிகாரி தொடங்கி வைத்தார். இந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.