ஆஸ்திரேலியா : மூவர்ணக் கொடியை காப்பாற்றியதற்காக சிறையில் உள்ள இந்திய மாணவர்.!
By : Bharathi Latha
ஆஸ்திரேலியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தலைநகர் சிட்னியில் உள்ள ஹாரிஸ் பூங்காவில் இரு படையினரை சேர்ந்த குழுவினர் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டார்கள். இதில் குறிப்பாக ஹரியான்விஸ் குழுவினர், காலிஸ்தானியர்கள் குழுவுடன் பயங்கரமான முறையில் மோதல் நடைபெற்றது. இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட விவசாயிகளின் போராட்டம் ஆஸ்திரேலியா வரை எதிரொலித்தது குறிப்பாக அங்குள்ள காலிஸ்தான் சார்பு குழு விவசாயிகளுக்கு ஆதரவாக சிட்னியில் உள்ள ஹாரிஸ் பூங்காவில் மிகப்பெரிய பேரணியை நடத்தி வந்தனர்.
அதில் முக்கியமாக மகாத்மா காந்தியடிகளின் சிலைகள் உடைப்பு மற்றும் இந்திய மூவர்ணக் கொடிகள் போன்றவை அதிகமாக சேதப்படுத்தப்பட்டன. மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கோஷங்களும் அதிகமாக காணப்பட்டன. இதில் இந்திய மாணவன் அதாவது ஹரியானாவைச் சேர்ந்த இந்திய மாணவர் தன்னுடைய படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளார். அப்போதுதான் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் மூவர்ணக்கொடி சேதப்படுத்தப்பட்டது தொடர்ந்து, அந்த இந்திய மாணவர் மூவர்ண கொடியை பாதுகாக்கும் நோக்கில் அந்தப் பேரணியில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்டு காலிஸ்தான் குழுவைச் சிறந்த ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.
எனவே பிப்ரவரியில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவர் சிறையில் உள்ளார். அவருக்கு அங்கு இந்தியா தூதரகம் மூலம் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்று அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் கூறுகிறார்கள். இந்த சம்பவம் குறித்து இவருடைய சகோதரர் கூறுகையில், "நாங்கள் எங்கள் சகோதரனை ஆஸ்திரேலியாவிற்கு படிப்பதற்காக அனுப்பியுள்ளோம். அங்கு செல்ல இந்திய கொடிகளை சேதப்படுத்தி கண்டு கடும் கோபம் கொண்டு உள்ளான். அதனைத் தடுப்பதற்கு முயன்றதற்காக அவனை சிறையில் வைத்துள்ளார்கள். எனவே அவனை விடுவிப்பதற்கு அரசின் சார்பில் முயற்சி எடுக்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.