Kathir News
Begin typing your search above and press return to search.

நியூயார்க்கில் நடைபெற்ற சங்கராந்தி : பிரமாண்ட யோகா நிகழ்ச்சி.!

நியூயார்க்கில் நடைபெற்ற சங்கராந்தி :   பிரமாண்ட யோகா நிகழ்ச்சி.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Jun 2021 12:38 PM GMT

உலக மக்கள் பலராலும், இன்று 7வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்த கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பேசினார் என்பதும் நினைவு கூறத்தக்கது.


முதல் சர்வதேச யோகா தினம், 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டது. இன்று 7வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்தியாவின் துணைத் தூதரகம், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டங்களை நடத்தப்பட்டது. 'சங்கராந்தி' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


குறிப்பாக சங்கராந்தி யோகா நிகழ்ச்சியில் பல வெளிநாட்டினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். மேலும் இந்தியாவின் கலாச்சார முறைப்படி செய்யும் யோகா மூலம் அவர்கள் ஒரு புதிய உத்வேகம் பெறுவதாகவும் கூறினார்கள். எனவே யோகா செய்வதன் மூலம் ஒருவர் பெரும்பலன் ஆனது அவர்கள் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் அவர்களை பலமானவர்கள் ஆக்குகிறது என்பதுதான் யோகாவில் மறைந்திருக்கும் உண்மை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News