Kathir News
Begin typing your search above and press return to search.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Jun 2021 12:36 PM GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது ஒரு நோயின் தாக்கம் முன்பு இருந்ததை விட தற்பொழுது அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மற்றும் பல்வேறு நாடுகளின் உள்ள மக்களில் வருகைக்கு தடை போன்ற பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை போட்டு நோய் தொற்றை கட்டுக்குள் வைத்துக் கொண்டு வந்த அமீரகத்தில் தற்பொழுது மீண்டும் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 544 DPI மற்றும் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டது.


மேலும் இது தொடர்பாக அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், 2,32,544 பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில், 2 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 28 ஆயிரத்து 976 ஆக உயர்ந்தது. இதன் மூலம் அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 2,040 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 1,988 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 6 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,802 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 568 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏற்கனவே உள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட தொற்றை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இந்த மாதத்தில் நோய் தொற்று அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News