மலேசியா வாழ் தமிழர்களை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா வைரஸ்!
By : Bharathi Latha
உலக அளவில் உருமாறிய கொரோன வைரஸ் தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு மிகப்பெரிய அச்சுறுத்தலையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றது. தற்பொழுது அந்த வகையில் மலேசியாவில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக இருந்து வரும் வைரஸ் லாம்ப்டா என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலைக்கு மிகவும் காரணமாக இருந்தது டெல்டா வகை வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் அதைப் போன்று தற்போது மலேசியாவில் அதிகரித்துவரும் தொற்றுக்கு லாம்ப்டா மற்றும் டெல்டா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிட லாம்ப்டா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக மலேசியா சுகாதாரத் துறை அதிகாரிகள் தற்பொழுது கருத்து தெரிவித்துள்ளது. எனவே அங்கு வாழும் மலேசியா வாழ் தமிழர்களுக்கு இது அச்சுறுத்தலாகும். குறிப்பாக அங்கு வேலை பார்த்து தமிழர்களுக்கும் இது சவாலான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
லாம்ப்டா கொரோனாவால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிப்பதாகவும் மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த கொரோனா அடுத்த அலையை ஏற்படுத்தக் கூடும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மலேசிய அரசாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.