கொரோனா காலகட்டத்தில் உதவிய அமெரிக்க வாழ் தமிழர்கள்! அசத்தல் செயல்! குவியும் பாராட்டுக்கள்!
By : Bharathi Latha
இத்தகைய ஒரு கஷ்டமான காலகட்டத்தில் மருத்துவமனைகளின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நோய் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மருத்துவமனைகளுக்கு தகுந்த உபகரணங்கள் இல்லாமல் போவதன் காரணம் ஆக பல நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
ஆனால் இத்தகைய காலகட்டத்தில் கூட பல நல்ல உள்ளங்கள் உதவியினால் மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் நன்கொடை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் உள்ள சான் ஆண்டோனியோ நகரில் வசித்து வரும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மூலமாக தற்போது சென்னை தாம்பரத்தில் இயங்கிவரும் மருத்துவமனைக்கும் உதவிகள் வழங்கப் பட்டுள்ளது.
இவர்கள் இந்த உதவியை சான் ஆண்டோனியோ தமிழ் சங்கம் மூலமாக உதவிகளை செய்து வருகிறார்கள். சான் ஆண்டோனியோ என்பது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும் இந்த நிறுவனம் மூலமாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் நன்கொடைகளை திரட்டி அந்த படத்தின் மூலமாக தற்போது உதவிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு மார்பு சிகிச்சை மருத்துவமனைக்கு 12 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மானிட்டர்களை வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது.
இதற்காக சான் ஆண்டோனியோ வாழ் தமிழ் மக்கள் 6000 டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர். உயிர் காக்கும் கருவி வழங்கும் இம்முயற்சியில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஈஸ்ட்டும் இணைந்து பயணித்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து நற்பணிகளை மேற்கொண்டு வரும் சான் ஆண்டோனியோ தமிழ் சங்கத்திற்கும் தமிழ் சங்கத்திற்கு மருத்துவமனையின் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.