வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பாக எடுக்கப்பட இருக்கும் முக்கிய முடிவுகள்!
By : Bharathi Latha
ஒரு நாட்டின் மக்கள் தங்களுடைய சொந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் காரணமாக பிற நாடுகளுக்கு குறிப்பாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களை நாம் அகதிகள் ஒன்று சொல்லுவோம். எனவே இந்த மாறி அகதிகளாக வேறு நாட்டில் இருந்து வரும் மக்களை நம்முடைய அரசு பல்வேறு நலத் திட்டங்கள் மூலமாக அவர்களுக்கு உதவி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது, மதுரையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய முக்கியம்சங்கள், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டி தரப்படும் என்று கூறினார். மேலும் அவர் கூறியது, 2 மாதங்களில் வெளிநாடுகளில் உள்ள 32 தமிழர்கள் இறந்து உள்ளனர். 32 பேரில் 30 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக இன்னும் சிறப்பாக வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு வெளியே வசித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும் இவ்வாறு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.