சென்னையில் உள்ள ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம்: லைக் செய்த உலக பணக்காரர், பிறகு நடந்த அதிசயம்!
By : Bharathi Latha
சென்னையில் உள்நாட்டிலேயே ட்ரோன்களை தயாரிக்கும் நிறுவனத்தை அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தை 2015ம் ஆண்டு கருடா ஏரோ ஸ்பேஸ் என்று பெயரிட்டு நடத்தத் தொடங்கினார். இவருடைய நிறுவனம் தயாரிக்கும் ட்ரோன்கள் மற்ற நிறுவனங்களின் ட்ரோன்களை பராமரிக்கும் ஆகும் செலவுகளை விட மிகவும் குறைவு. எனவே பல்வேறு பணிகளுக்காக ட்ரோன்களை பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் இவருடைய ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
குறிப்பாக இந்த நிறுவனத்தின் ட்ரோன்கள், சிங்கப்பூரில் உள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மையத்தில் உள்ள, 1 லட்சத்து 22 ஆயிரம் சோலார் பேனல்களை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், மற்ற நிறுவனத்தில் ட்ரோன்களலோடு ஒப்பிடுகையில் குறைந்த அளவு தண்ணீரை, தங்களது ட்ரோன்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிங்கப்பூரில் உள்ள சோலார் பேனல்களை ட்ரோன்கள் பராமரிப்பது தொடர்பான வீடியோவை கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத் தலைவர் அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவை டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் உள்ளிட்டவர்களை அவர் டேக் செய்திருந்தார். அந்த வீடியோவுக்கு எலான் மஸ்க் லைக் போட்டதாக தெரிகிறது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் எலான் மஸ்க் அவர்கள் இந்த நிறுவனத்தின் சேவையை லைக் செய்ததில் இருந்து, இந்த நிறுவனத்திற்கு சுமார் ஏழரை கோடி ரூபாய் முதலீடு செய்ய லண்டனை சேர்ந்த பல்வேறு பெரிய நிறுவனங்கள் முன் வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.