நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை இயக்க அதிகாரியாக தேர்வான இந்திய வம்சாவளி!
By : Bharathi Latha
நியூயார்க்கில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் துணைத் தலைவராகவும் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாகவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நௌரீன் ஹாசன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியான ஹாசனை தலைமை அதிகாரியாக நியமிப்பது இதுவே முதல்முறையாகும். இவர் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் மார்ச் 15ஆம் தேதி முதல் தான் இவர் தன்னுடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு தலைமை இயக்க அதிகாரியாக செயல்பட முடியும் என்றும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு தெரிவித்துள்ளது.
ஹாசன் கடந்த 25 வருடங்களாக நிதி சேவை துறையில் பணியாற்றி இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய பெற்றோர் இந்தியாவிலிருந்து நியூயார்க்குக்கு குடியேறி, பிறகு அங்கேயே குடியுரிமை பெற்று உள்ளனர். நியூயார்க் பெடரல் வங்கியின் CEOவான வில்லியம்ஸ் கூறுகையில், "ஹாசனை தற்போது தலைமை இயக்க அதிகாரியாக நியமித்து உள்ளது குறித்து நாங்கள் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்த வில்லை. ஏனென்றால் அவர் மிகவும் சிறப்பான முறையில் பணிகளை செய்பவர் மேலும் நிதி சார்ந்த துறையில் அவர் எவ்வளவு அனுபவசாலி என்பது அவருடைய துறையில் அவர் நீடித்திருந்த காலம் மிகவும் மிகவும் பெரிதாகும்" என்று கூறினார்.
குறிப்பாக ஹாசன் நிதி சார்ந்த துறையில் கணினி தொழில்நுட்பம் மற்றும் வணிக மயமாதல் டிஜிட்டல் முறையில் கணக்குகளை மேம்படுத்துவது போன்ற தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார். குறிப்பாக இவர் பெண்களுக்கு தேவையான சுய உதவி குழுக்கள் நடத்தி வரும் வரை என்பதும் குறிப்பிடத்தக்கது.