Kathir News
Begin typing your search above and press return to search.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கனடாவில் அமைக்கப்பட்ட மகாத்மாகாந்தியின் ஐஸ் சிலை!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கனடாவில் அமைக்கப்பட்ட மகாத்மாகாந்தியின் ஐஸ் சிலை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 March 2021 11:46 AM GMT

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிறைய இந்தியர்கள் வசிக்கும் ஒரு நாடாக கனடா இருந்து வருகிறது. இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கனடாவில் மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், கனடாவில் பிரபல ஹோட்டலில் மகாத்மா காந்தியின் ஐஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது.


கனடாவின் கியூபக் நகரில் உள்ள பிரபல 'Hotel de Glace' ஹோட்டலில் தான் மகாத்மா காந்தியின் ஐஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம் ஏழு அடி. மார்க் லெபயர் என்ற ஐஸ் சிற்பக்கலை வல்லுநரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய சிலையின் படத்தை டொரோண்டோவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மார்க் லெபயர் ஒன்பது பிளாக் ஐஸ்களை பயன்படுத்தி ஐந்து மணி நேரத்தில் இச்சிலையை உருவாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.


செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய தூதர் அபூர்வா ஸ்ரீவாஸ்தவா, "இந்தியா 75 சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்களை, காந்திஜியின் பனி சிலை வேண்டுகோளுடன் ஒரு சின்னத்தில் தொடங்க விரும்பினோம்" என்று கூறினார். காந்தி சிலையை வடிவமைத்தது தனகு உற்சாகத்தை தந்ததாக மார்க் லெபயர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 75ஆம் சுதந்திர தினத்துக்கான கொண்டாட்டங்களை மார்ச் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News