குடியுரிமை நிராகரித்த ஆஸ்திரேலியா: இந்தியாவிற்கு திரும்பவும் இந்திய வம்சாவளி!
By : Bharathi Latha
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி தம்பதிக்கு பிறந்த சிறுவன் கயான் கத்யால். இவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற அனைத்து தகுதிகளும் பெற்றிருந்தாலும், மாற்றுத்திறனாளியாக இருப்பதால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறார். இதன் விளைவாக, கயான் கத்யாலின் குடும்பமே இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. கயான் கத்யால் பெருமூளை வாதத்தால் பாதிக்கப் பட்டுள்ளார்.
அவரை கவனித்துக்கொள்ள ஏராளமாக செலவுகள் ஆகும் எனவும், வரி செலுத்துவோருக்கு சுமை அதிகரிக்கும் எனவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த வருண் கத்யால், பிரியங்கா கத்யால் தம்பதிக்கு பிறந்தவர் கயான் கத்யால். 12 வருடங்களுக்கு முன் வருண் ஆஸ்திரேலியா வந்துள்ளார். உணவகத்தில் செஃப்பாக பணிபுரிந்து வருகிறார் வருண். இவரது குடும்பம் தொடர்ந்து வரி செலுத்தி வந்த நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஏனெனில், கயான் கத்யாலை கவனித்துக்கொள்ள அடுத்த 10 ஆண்டுகளில் 13 லட்சம் டாலர் செலவாகும் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய சட்டங்களின்படி, permanent resident ஆக இல்லாதவர்களின் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்க முடியும். வருண் குடும்பம் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற விண்ணப்பித்திருந்த நிலையில், மகனின் பிரச்சினை காரணமாக விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.