சவுதி அரேபியாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா!
By : Bharathi Latha
இன்று உலகமே எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரும் தொற்றுக்கு எதிராக தன்னுடைய குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்காமல், தன்னுடைய மக்களை காக்க வேண்டும் என்று ஒரே எண்ணத்துடன் பணிபுரியும் அனைத்து சமூக பணி செய்யும் ஊழியர்களையும் மற்றும் அரசு பணியாளர்கள் கௌரவிக்கும் விதமாக சவுதி அரேபியாவில் நூல் வெளியீட்டு விழா ஒன்று நடந்துள்ளது. இந்த விழாவில் 'The Distance' என்னும் நூல் அவர்களை முழுவதுமாக பாராட்டி எழுதப்பட்ட ஒரு நூலாகும்.
சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்காகவும், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்காகவும் தொண்டாற்றிய எண்ணற்ற சமூக பணி ஊழியர்கள், அரசு பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவரையும் கெளரவிக்கும் வகையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம், சவுதி அரேபியா சார்பாக 'The Distance' நூல் வெளியீட்டு விழா, ரியாத்திலுள்ள இந்திய தூதரக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய தூதரகத்தின் துணை ஆணையர் (DEPUTY CHIEF OF MISSION) ராம் பிரசாத் முதல் பிரதியை வெளியிட ,இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தின் ரியாத் மாகாண தலைவர் பஷீர் இங்காபுழா அதனை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ரியாத் மாகாண செயலாளர் முகமது ரமுஜுதீன், டெல்லி பிரிவு தலைவர் ஜாவித் பாஷா மற்றும் சமூகநலப்பிரிவு பொறுப்பாளர் முனீப் பாளூர் ஆகியோர் உடனிருந்தனர்.