இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கிடைத்த 488 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பவளப்படிமம்!
By : Bharathi Latha
இங்கிலாந்தில் வசித்து வரும், 6 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி சிறுவன், 488 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த புகைபடிமத்ததை கண்டுபிடித்துள்ளான். அவனுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்தில் வசித்து வரும் சித்தாக் சிங் ஜாமத் (வயது 6) என்ற இந்திய வம்சாவளி சிறுவன் படுசுட்டியாக இருந்துள்ளான். அவனுக்கு கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பலரும் பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அதில் அவனுக்கு 'பாசில்ஸ்' எனப்படும் புதைபடிமங்களை தோண்டி எடுக்கும் உபகரணங்கள் பரிசாக கிடைத்திருக்கிறது.
அதனை கொண்டு சும்மா இருக்காமல், வீட்டை சுற்றி தோண்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான். இப்படி ஒரு நாள், மேற்கு மிட்லாண்ட் என்ற இடத்தில் உள்ள தோட்டத்தில் தோண்டி இருக்கிறான். அங்கு அவனுக்கு கொம்பு வடிவத்தினால் ஆன பாறாங்கல் ஒன்று கிடைத்திருக்கிறது. ஒருவேளை இது, பழங்கால உயிரினத்தின் பல் அல்லது கொம்பாக இருக்கும் என அவனுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
அதனை தோண்டி எடுத்த சிறுவன், தொடர்ந்து ஆராய்ந்திருக்கிறான். அதில் பழைமையான புதைபடிமங்கள் அவனுக்கு கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியுடன் அதனை எடுத்து கொண்டு போய் தன் தந்தையிடம் தந்திருக்கிறான். மகனின் ஆர்வத்தை பார்த்த தந்தையும், அதனை ஆராய் அனுப்பி இருக்கிறார். அப்போது தான் அது பல லட்சம் ஆண்டுகள் பழமையான கொம்பு பவளப் பாறைகளின் படிமங்கள் என்பது தெரியவந்தது. அதாவது 488 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். சிறுவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.