Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னணி மருந்து நிறுவனத்தின் CEO, இந்திய வம்சாவளி அமெரிக்காவில் சுட்டுக்கொலை !

முன்னணி மருந்து நிறுவனத்தின் CEO மற்றும் இந்திய வம்சாவளி நேற்று அதிகாலை அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னணி மருந்து நிறுவனத்தின் CEO, இந்திய வம்சாவளி அமெரிக்காவில் சுட்டுக்கொலை !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Nov 2021 1:38 PM GMT

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியின் ப்ளைன்ஸ்போரோவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மற்றும் முன்னணி மருந்து நிறுவனத்தின் CEO ஆன ஸ்ரீ ரங்கா அரவபள்ளி, என்பவரை அடையாளம் தெரியாத ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார் இதுபற்றி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் வந்துள்ளார். அப்பொழுது ஏற்கனவே வீட்டிற்குள் கொள்ளையடிப்பதற்காக வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.


மேலும் இந்திய வம்சாவளியான நபரான இவர் அங்கு மிகப்பெரிய பணக்காரராகவும் இருந்து உள்ளார். இதன் காரணமாக இவருடைய வீட்டில் திருடுவதற்காக நுழைந்த நபர் ஒருவர் தான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என்று நியூயார்க் போஸ்ட் செய்தித்தாள்களில் காவல்துறையை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நள்ளிரவில் பென்சில்வேனியாவின் நோரிஸ்டவுனைச் சேர்ந்த 27 வயதான ஜெகாய் ரீட்-ஜான் என்பவரால் இந்திய வம்சாவளி கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தகவல்களை கூறுகிறார்கள்.


எனவே அதற்போது போலீசார் ஜெகாய் ரீட்-ஜானை கைது செய்து முதல் நிலை குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2014 முதல் ஸ்ரீ ரங்கா அரவபள்ளி ஆரெக்ஸ் ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். ஆரெக்ஸ் ஆய்வகம் மருத்துவ பொருட்கள், மாத்திரைகள் மற்றும் மென்மையான ஜெலட்டின் காப்ஸ்யூல்களை உருவாக்கும் ஒரு மருந்து நிறுவனமாகும்.

Input & Image courtesy:Economic times



Next Story
கதிர் தொகுப்பு
Trending News