தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் NRI வாக்காளராக வாக்களிப்பது எப்படி?
By : Bharathi Latha
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.க வின் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அன்று தொடக்கி வைத்தார். தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்க எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கினார். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணியில் ஏற்படும் பொய்களை ஒவ்வொன்றாக கூறினார். ஊழல்களின் மறு உருவம் ஆக இருந்தால் அது எதிர்க்கட்சியினர் ஆகத்தான் இருக்க முடியும் என்பது போன்ற அனல் பறக்க தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 234 பேர் கொண்ட சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து வாக்காளர் பெருமக்கள் தங்களுடைய வாக்குச்சாவடியில் பெயர்களை சரிசெய்து வருகின்றனர். இருப்பினும் வெளிநாட்டில் இருக்கும் NRI வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பாக வாக்களிக்க முடியும்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI வாக்காளராக பதிவு செய்ய அனுமதித்துள்ளது. வருங்கால வாக்காளர் இந்திய குடிமகனாக இருக்கும் வரை, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற காரணங்களால் நாட்டிலிருந்து வெளியேறாதவர் வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறவில்லை, இல்லையெனில் அவர்களின் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் வாக்காளராக பதிவு செய்ய தகுதியுடையவர். மேலும் அவர்கள் இங்கு நடக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஒரு NRI வாக்காளராக உங்களை எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
முதலில் உங்கள் வாக்குச் சாவடி மற்றும் உங்கள் பகுதியைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகளின் தொடர்பு கொண்டு உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் அடங்கி உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்கவும். அப்படி இல்லை என்றால், நீங்கள் படிவம்6A ஆன்லைனில் அதற்கான வலைதளத்திற்கு https://voterportal.eci.gov.in/சென்று தேவையான விவரங்களை பூர்த்தி செய்த பிறகு ஆதாரங்களை பதிவேற்றி NRI வாக்காளராக இணைக்கலாம்.