ஆஸ்திரேலியா: #SpellingBee போட்டியில் முதல் பரிசை வென்ற இந்திய வம்சாவளி மாணவி!
By : Bharathi Latha
ஆஸ்திரேலியாவில் தற்போது பிரதமர் அவர்களின் முன்னிலையில் தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி நடைபெற்றது. எனவே கடினமான சுற்றுகளில் வெற்றி பெற்று தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தீக்ஷிதா கார்த்திக் தேசிய சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட சுமார் 21 ஆயிரம் பேர் போட்டி, போட்ட இந்த போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி வெற்றி பெற்றிருப்பதால் பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முழுவதிலுமிருந்து 490 பள்ளிளைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் 5 மற்றும் 6 வகுப்பு மாணவ, மாணவியருடன் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற தீக்ஷிதா கார்த்திக்கு இந்த விருதை வழங்க இருக்கிறார். மெல்போர்னில் படித்து வரும் தீக்ஷிதாவுக்கு ஸ்பெல்லிங் அறிவதென்பது விருப்பமான பாடமாக இருந்து வருகிறது. இவருக்கு 2 வயது இருக்குமபோதே இவருடைய பெற்றோர் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். அப்போதிருந்தே ஆங்கிலத்தில் ஆர்வம் காட்டி வந்த தீக்ஷிதா, ஸ்பெல்லிங் அறிவதில் அதிலும் குறிப்பதாக கடினமான வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங் அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
இந்த வெற்றி குறித்து தீக்ஷிதா கூறுகையில், "கடினமான வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் அறிவதில் இருந்த ஆர்வமும் கடும் உழைப்புமே இந்த வெற்றிக்கு காரணம்" என்று கூறினார். முடியாத செயல் என்று உலகத்தில் இல்லவே இல்லை என்பதை தன்னுடைய கடின உழைப்பின் மூலம் இந்த மாணவி நிரூபித்துள்ளார்.