Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் 75 வது சுகந்திர தினத்தையொட்டி பக்ரைனில் கலை நிகழ்ச்சிகள்!

India celebrates its 75th Independence day not only in India it is also celebrated in Bekhraine also

இந்தியாவின் 75 வது சுகந்திர தினத்தையொட்டி பக்ரைனில் கலை நிகழ்ச்சிகள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 July 2021 12:49 PM GMT

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்தியாவிற்கான ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக உள்ள அந்த தினத்திற்காக பல்வேறு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது பக்ரைனில் உள்ள வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மகிழ்விக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத் தினத்திற்காக தற்பொழுது பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி கலைநிகழ்ச்சி விழா நடந்தது.


கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக நிகழ்ச்சிகள் முழுவதும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீ வாஸ்தவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் இளம் கலைஞர்களின் திறமையை வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இந்திய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.




குறிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களின் திறமை மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் தனது நன்றியை இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீ வாஸ்தவ் தெரிவித்தார். இறுதியாக மேலும் அவர் கூறுகையில் இந்தியாவின் கல்வித் திட்டத்தைப் பற்றியும் அதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் அவர் பாராட்டினார். கடைசியாக, அனைத்து இந்திய கலைகளை பார்வையாளர்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்திய, அனைத்து கலைஞர்களுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Input: https://twitter.com/IndiaInBahrain/status/1421398378731163649?ref_src=twsrc%5Etfw

Image courtesy: twitter post


Next Story
கதிர் தொகுப்பு
Trending News