அபுதாபி: இரண்டாவது முறையாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் !
அபுதாபியில் நடைபெற்ற தமிழர்களுக்கான இலவச மருத்துவ முகாம்.
By : Bharathi Latha
அபுதாபியில் உள்ள தமிழர்களுக்காக குறிப்பாக அங்கு வசிக்கக்கூடிய அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு முகாமை ஜூன் மாதத்தில் ஏற்பாடு செய்திருந்தது. தற்போது இரண்டாவது முறையாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் இலவச மருத்துவம் வழங்கப்பட்டது.
இதற்காக அங்கு உள்ள குடும்பங்களுக்கு அட்டை வழங்கப்படுகிறது. எனவே அந்த அட்டையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு இலவசமாக மருத்துவ வசதிகளை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி காலை 9 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH கட்டிடத்தில் உள்ள Mezzanine Floor-ல் மிக சிறப்பானமுறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் அவர்களின் ஆலோசனைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இதேபோன்று அய்மான் சங்க நிர்வாகிகளுக்கு முதல்கட்டமாக 350 குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைந்தனர் குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய விஷயமாகவே இருந்து வருகிறது.
Input: http://aimansangam.com/
Image courtesy: aimansangam