உலகின் மிகச் சிறந்த மாணவியாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு: அமெரிக்கா அறிவிப்பு !
உலகின் மிகச் சிறந்த மாணவியாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
By : Bharathi Latha
உலகின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரி என்னும் சிறுமியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுத்து உள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இருந்து, நியூஜெர்சியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது நடாஷா பெரி. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 2020-21 இளம் திறமையாளர்கள் தேடல் மையத்தில் பதிவு செய்திருந்த சுமார் 19,000 மாணவர்களில் நடாஷாவும் ஒருவர்.
இந்திய வம்சாவளி சிறுமி அமெரிக்காவின் கல்வி ஊக்கத் தொகை தகுதித் தேர்வு மற்றும் அமெரிக்க கல்லூரி நுழைவுத் தேர்வு ஆகிய தேர்வுகளில் வெளிப்படுத்தியுள்ள திறமையை அடிப்படையாகக் கொண்டு உலகின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை இவரை தேர்ந்தெடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 5ம் வகுப்பு படித்து வந்தாலும், தகுதித் தேர்வுகளில் அவர் அளித்த பதில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இணையான திறன் கொண்டதாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் SAT அல்லது ACT தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image courtesy: indian express news