அமெரிக்காவில் பெண்கள் நிகழ்த்தும் தமிழ் புத்தகக் கண்காட்சி !
அமெரிக்காவில் முதன் முதலாக நடத்தப்பட்ட தமிழ் புத்தக கண்காட்சி.
By : Bharathi Latha
அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணம், அட்லாண்டா மாநகரப் புறநகர்ப் பகுதியான கம்மிங் நகரில் அமைந்திருக்கும் பௌலர் பார்க் அருகில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் பெண்கள் நடத்தும் தமிழ் புத்தக கண்காட்சி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது இந்தியா, இலங்கை, சுவீடன், கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, என்று பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் போன்ற பல்வேறு நூல்களின் கண்காட்சியில் இடம் பெற்று இருப்பது மற்றொரு சிறப்பு அம்சம்.
தற்போது அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் நூல் கண்காட்சி, அட்லாண்டாவில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கு குறிப்பாக வல்லினச் சிறகுகள் மின்னிதழ், உலகப் பெண் கவிஞர் பேரவை, ஒருதுளிக்கவிதை, இவர்களுடன் இணைந்து அட்லாண்டா தமிழ் நூலகம் நடத்திய இந்த நூல் கண்காட்சி சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. முனைவர் திருமிகு. அமிர்த கணேசன் அவர்களின் முன்னெடுப்பில், அவருடைய வழிநடத்துதலில், திருமிகு. ராஜி ராமச்சந்திரன் அவர்களின் திட்டமிடலில், அருமையாகக் கண்காட்சிப் பணிகள் ஒவ்வொன்றும் செயல்படுத்தப்பட்டன.
இந்த கண்காட்சியில் முதலில் எழுத்தாளர்களின் புத்தகங்கள் இடம் பெறுவதற்கான பிரசுரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன பிறகு அதற்கான இந்தியாவில் இருந்து நூல்கள் அனைத்தையும் பொறுப்பாகப் பெற்று அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்ததில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் கவிஞர் மஞ்சு முக்கியப் பங்காற்றினார். சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், சிறுவர்க்கான காட்சி அட்டைகள், வரலாற்று நூல்கள், என்று பல வகையான நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடைய நூல்கள் ஒரு மேசை முழுவதும் இடம் பெற்றிருந்தன.
Input: https://eluthu.com/view-ennam/42981
Image courtesy: Eluthu