Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கக் கப்பல் படையில் வேலை செய்யும் அமெரிக்க-சீக்கியர் தலைப்பாகை அணிவது குறித்த வழக்கின் தீர்ப்பு !

அமெரிக்க கப்பல் படையில் வேலை பார்க்கும் சீக்கியர் வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கக் கப்பல் படையில் வேலை செய்யும் அமெரிக்க-சீக்கியர் தலைப்பாகை அணிவது  குறித்த வழக்கின் தீர்ப்பு !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Sep 2021 1:28 PM GMT

இந்தியாவில் சீக்கியர்கள் பலபேர், தங்களுடைய தலையை தலைப்பாகையும் மற்றும் பெரிய அளவில் தாடியும் வைத்த தோற்றத்தில்தான் காட்சியளிப்பார்கள். குறிப்பாக வட இந்தியாவில் இவர்களை சுலபமாக அடையாளம் காணவும் முடியும். ஆனால் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் சீக்கியர்கள் தங்களுடைய மரபின் இத்தகைய செயல்களை செய்ய அனுமதி நிராகரிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது அமெரிக்காவில் கப்பற்படை தளமான United States Marine Corps Corps(USMC) வேலை செய்யும் சுக்பீர் சிங் தூர் தன்னுடைய தோற்றத்தினால் அங்கு நிராகரிக்கப்பட்டார். ஏனெனில் இவருடைய தோற்றம் மற்றவர்களிடம் இருந்து சற்று வித்தியாசத்தை ஏற்படுத்தியது.


குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் கச்சிதமாக தோற்றத்தை வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதிலும் கப்பற்படையில் வேலை பார்க்கும் ஒருவர் எப்பொழுதும் கிளீன் ஷேவ் தான் செய்திருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளும் அங்கு இருக்கும். ஆனால் அமெரிக்க சீக்கியர் ஆன சுக்பீர் சிங் அவருக்கும் இப்படிப்பட்ட ஒரு பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக இவருடைய வேலையும் இங்கு பாதிக்கப்பட்டது. இதனால் இவர் அங்குள்ள கோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அந்த வழக்கின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


தீர்ப்பு தற்போது சுக்பீர் சிங் அவருக்கு சாதகமாக கொண்டுள்ளது. அதாவது அவருடைய மதத்தைப் பொறுத்தவரையில் அவர் அத்தகைய செயல்களை செய்யலாம் அதனால் அங்குள்ள கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க இராணுவ அகாடமி வெஸ்ட் பாயிண்ட் 2016 ஆம் ஆண்டில், ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் சிங்கிற்கு ஆதரவாக ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது. இது அமெரிக்க இராணுவம் தங்கள் கொள்கையை நிரந்தரமாக மாற்றுவதற்கு வழி வகுத்தது.

Input & Image courtesy:Times of India



Next Story
கதிர் தொகுப்பு
Trending News