விவசாயத்தை காப்பதற்காக செயற்கை மழை உருவாக்கும் முயற்சியில் சீனா!
விவசாயத்தில் மற்றும் பயிர்களை காப்பதற்காக செயற்கை மழையை உருவாக்கலாமா? என்று முயற்சியில் சீனா களமிறங்கியுள்ளது.
By : Bharathi Latha
சீனாவில் தற்போது பெரும்பாலான பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. 67 ஆண்டுகள் இல்லாத அளவில் தற்போது அதிகளவான வெப்பம் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பயிர்கள் உருவாக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . போதிய நீர் வசதி இல்லாததன் காரணமாக பயிர்கள் வாடும் சூழ்நிலை நிலவியுள்ளது. கோடை காலத்தில் அதிகமான வெப்பம் காரணமாக நீர் நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டதாக சீன அரசாங்கம் கூறியிருந்தது.
சீனாவின் அண்டை மாகாணமான ஹூபே மகாணத்தில் ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்ததாக அந்த வாகன அரசு செய்தி வெளியிட்டிருந்தது ஏற்கனவே சீனாவில் தற்போது பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வரட்சி விவசாயத்தை முற்றிலுமாக பாதித்து உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக சீன அரசாங்கம் செயற்கை மழையை உருவாக்குவதாக அறிவித்து இருந்தது இந்த முயற்சி கைகூடும் என்பது தெரியவில்லை. ஆனால் இதை எடுத்தால் மட்டும் தான் அங்கு உள்ள பயிர்களை தற்போது பாதுகாக்க முடியும்.
ஹூபே மாகாணத்தில் மீதம் உள்ள பயிர்களை காப்பதற்காக 75 சதவீத பங்கு அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்காக செயற்கை மறைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். செயற்கை மழையை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த சீன அரசாங்கம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Input & Image courtesy: News