Kathir News
Begin typing your search above and press return to search.

UAE பயணம் செய்யும் NRIகள் கவனத்திற்கு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு !

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் இந்தியர்களுக்கு, UAE அரசு தற்பொழுது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

UAE பயணம் செய்யும் NRIகள் கவனத்திற்கு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Aug 2021 1:30 PM GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானம் மூலம் செல்லும் இந்தியர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் பயணம் மேற்கொள்ளும் 6 மணி நேரத்துக்கு முன்பாக PCR டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், டிரான்சிட் பயணிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று UAE கூறியுள்ளது.


மேலும் இதன் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விபரங்கள் இதோ, இதுவரை இருந்த 4 மணி நேரத்துக்கு முன்பாக PCR டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக 6 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட PCR டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாள், இலங்கை மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு PCR டெஸ்ட் முடிவுகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருக்கும் இந்தியர்கள், அந்நாட்டுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் அபுதாபி செல்பவர்கள் 10 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். விமான நிலையங்களில் கொடுக்கப்படும் மெடிக்கல் அப்ருவ் wristband அடையாளத்தை பயணிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சில குறிப்பிட்ட லேப்களில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் டெஸ்ட் மட்டுமே அங்கீகரிக்கபட்டவையாக எடுத்துக்கொள்ளப்படும் என யு.ஏ.இ தெரிவித்துள்ளது. பயணிகள் கட்டாயம் Alhosn app -ல் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். எனவே இத்தகைய நடவடிக்கைகள் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு விதிக்கப்பட்டுள்ளன.

Input:https://www.news18.com/news/auto/uae-issues-fresh-guidelines-for-air-travelers-from-india-check-details-here-4113581.html

Image courtesy:news18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News