Kathir News
Begin typing your search above and press return to search.

ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை - சீனாவின் அதிரடி தீர்ப்பு!

ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை சீனாவின் அதிரடி தீர்ப்பு.

ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை - சீனாவின் அதிரடி தீர்ப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Sep 2022 2:37 AM GMT

சீனாவின் முன்னாள் மந்திரிக்கு ஊழல் வழக்கில் தற்பொழுது மரண தண்டனை என்ற அதிரடி தீர்ப்பு பிடிக்கப்பட்டுள்ளது. சீனாவை பொருத்தமட்டில் 2012 ஆம் ஆண்டு ஜின்பிங் அதிபர் பதவி ஏற்றது முதல் ஊழலை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறார். அவர் பதவி காலத்தில் இதுவரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 10 லட்சத்திற்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சீன ராணுவத்தின் டஜன் கணக்கிலான அதிகாரிகள் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிபர் தனது செல்வாக்கு மற்றும் அதிகார தளத்தை வலுப்படுத்தி நிலைநிறுத்திக் கொள்ள இருப்பதற்காக விமர்சனங்கள் கருதுகின்றனர்.


அந்த வகையில் சீனாவில் முன்னாள் நிதித்துறை மந்திரி ஜெய் குவா தனது பதவி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி பல தொழில் நடவடிக்கைகள் உத்தியோக நிலைகள் சட்ட வழக்குகள் போன்றவற்றில் உதவிக்கரம் நீட்டி அதற்காக பல்வேறு ஊழல் வழக்குகளில் நல்ல பணம் பார்த்து இருக்கிறார். மேலும் இவர் ஊழல் வழக்கின் காரணமாக 17.3 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுகளை நேரடியாக இவர் பெற்றுள்ளார் என்று குற்றச்சாட்டு உள்ளது.


இந்த விசாரணை முடிவில் இவர் மீது குற்றச்சாட்டு சந்தேகம் இடமின்றி நிரூபிக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் கூடிய மரண தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதை அந்த நாட்டின் அரசு இணைய ஊடகம் வழியாக உறுதி செய்தது. இந்த அதிரடி தீர்ப்பில் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது. அதிபர் பதவிக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடையுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்க உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அடுத்த மாதம் 16ஆம் தேதி நடக்கிறது. இதன் மூலம் இவருடைய பதவி ஆண்டு காலம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Malaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News