இந்திய மாணவர்களுக்கு விரைவில் விசா - சீனாவின் முடிவு!
இந்திய மாணவர்களுக்கு விரைவில் விசா வழங்கப்படும் என்று சீன அரசாங்கம் கூறியுள்ளது.
By : Bharathi Latha
இந்திய மாணவர்கள் பல்வேறு நபர்கள் சீனாவில் தங்கி படித்து வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம், ரோபோட் டெக்னாலஜி போன்ற பல்வேறு படிப்புகளை படித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா காரணமாக நாடு திரும்பிய அவர்கள் தற்போது வரை வீட்டிலிருந்து படித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு சீன வருவதற்கான விசாக்களில் நாளை முதல் வழங்குவதாக சீனா கூறியுள்ளது.
குறிப்பாக மாணவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து விசா வழங்குவதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சீன பல்கலைகழகங்களில் படித்து தொற்றுநோய் காரணமாக தாயகம் திரும்பிய மாணவர்கள் மற்றும் புதிய மாணவர்களுக்கு இந்த ஆண்டு செல்வதற்கான விசா வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டுமின்றி தொழிலதிபர்களுக்கும் மேலும் சீனா சீனாவில் வசிக்கும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தற்போது விசாரிப்பதாக டெல்லியை மையமாகக் கொண்ட சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சில பல்கலைக் கழகங்களில் பறித்துக் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களையும் செய்துள்ளார்கள். இரண்டு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவை குறிப்பாக விமான சேவை விரைவில் தொடங்கப்படும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
Input & Image courtesy: Polimer