Kathir News
Begin typing your search above and press return to search.

12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம் !

உலக அறநெறி தினத்தை கொண்டாடும் வகையில் 12 நாடுகள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம்.

12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Sep 2021 2:13 PM GMT

செப்டம்பர் 2 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக அறநெறி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை குறிப்பாக ஆங்கிலத்தில் World Moral Day என்றும் கூறுவார்கள். இதனை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் 12 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதன் சார்பாக 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியை குறிப்பாக WHD அமைப்பின் தலைவர் Dr.சையத் அப்துல் பாசித்துக்கு தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஆ.முகமது முகைதீன் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்குவது உலக உயிர்கள் இடையே எப்படி அறநெறியை செலுத்த வேண்டும் என்பதுதான்.


உலகில் ஒவ்வொரு மனிதர்களும் பிற மனிதர்களிடம் கொண்டுள்ள அறநெறியின் காரணமாகத்தான் மனித வாழ்க்கைச் சக்கரம் எந்த ஒரு தடையும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலக மனிதர்களிடத்தில் அன்பு, அமைதி, ஒற்றுமை நிலைக்கவும், மனித நேயம் தழைக்கவும் சக மனிதர்களுக்கு உதவிடவும் பிற உயிரினங்களின் மீது அன்பு செலுத்திடவும் இயற்கையை பாதுகாக்கவும் இந்த நன்னாளில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

InputWhd

Image courtesy:wikipedia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News