இந்திய தூதர் முன்னிலையில் எகிப்தில் நடைபெற்ற இந்திய உணவு கண்காட்சி !
எகிப்தில் நடைபெற்ற இந்திய உணவுப் பொருட்கள் கண்காட்சி.
By : Bharathi Latha
ஒவ்வொரு நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த அந்த நாட்டில் மக்களுக்கு தெளிவாக விளக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவில் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் மற்ற நாடுகளுக்கு பிரதிபலிக்கப்படுகிறது அந்தவகையில் தற்போது இந்திய உணவுகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி எகிப்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்றது.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஆப்பிரிக்கா உணவு தயாரிப்பு கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்திய கண்காட்சி அரங்கை எகிப்து நாட்டுக்கான இந்திய தூதர் அஜித் குப்தே திறந்து வைத்தார். அதனையடுத்து இந்திய தூதருக்கு கண்காட்சி அதிகாரியின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். இதில் இந்தியாவைச் சேர்ந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், பதப்படுத்துதல், பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
Ambassador Ajit Gupte inaugurated the Indian pavilion at the 9th edition of Africa Food Manufacturing Exhibition held in Cairo on 3rd Aug. The Indian companies are showcasing cutting edge sustainable technologies in the field of food processing, packaging, labelling & logistics. pic.twitter.com/pjodRoAK7I
— India in Egypt (@indembcairo) August 3, 2021
இந்தியாவில் உணவுப் பொருட்களை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய உணவுப்பொருட்களை மக்களுக்கு காட்சிப்படுத்தினார் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். குறிப்பாக, ஏற்றுமதியாகும் உணவுப் பொருட்களில் பெரும்பாலும் இந்திய உணவு பொருட்கள் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகிறது.
Input: https://twitter.com/indembcairo/status/1422595837050462211?ref_src=twsrc%5Etfw
Image courtesy: Twitter post pictures